Friday, 7 February 2014

Leave a Comment

தனுஷ் பாடலாம்,. ஆனால் டான்ஸ் ஆடக் கூடாது..சிம்புவின் அதிரடி....



சில வருடங்களுக்கு முன்பு வரை எதிரிகளாக இருந்த சிம்புவும், தனுஷும் திடீரென ‘நண்பேன்டா’ ஆனார்கள்.

சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவர் இவரைப் புகழ்வதும், இவர் அவரைப் புகழ்வதுமாக நட்பு வளர்ந்தது.

அதுமட்டுமல்ல, இருவரும் அடிக்கடி சந்தித்து சரக்கடிக்கிறார்கள் என்றும் சிலர் நம் காதைக்கடித்தார்கள்.

இந்நிலையில் ‘இரண்டாம் உலகம்’ படத்தை எடுத்த செல்வராகவனுக்கு திரை உலகத்திலே இடம் இல்லாமல்போக, தன் அண்ணனுக்கு இப்படியொரு நிலை வந்துவிட்டதே என்று வருந்திய தனுஷ், செல்வராகவனுக்கு கால்ஷீட் கொடுக்கும்படி சிம்புவிடம் சிபாரிசு செய்திருக்கிறார்.

நண்பனின் பேச்சைத் தட்ட முடியாமல் செல்வராகவனுக்கு கால்ஷீட் தர சம்மதித்த சிம்பு, பாண்டிராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் படங்களை முடித்த உடனே கால்ஷீட் தருவதாகவும் சொல்லி இருக்கிறார்.

புதுப்பேட்டை டைப்பில் ஒரு ரௌடிப்பய கதையை ரெடி பண்ணிய செல்வராகவன், சமீபத்தில் சிம்புவை சந்தித்து கதையைச் சொல்லி இருக்கிறார்.

அப்படியே, ‘அனிருத் இசையமைக்கிறார் என்றும், தனுஷ் ஒரு பாடல் பாடுகிறார், அந்தப் பாடலுக்கு தனுஷ் ஆடவும் இருக்கிறார்’ என்று சொல்லிக்கொண்டே போனாராம் செல்வராகவன்.

அதைக் கேட்டதும் சிம்புவின் முகம் மாறி இருக்கிறது.

அனிருத் இசையமைப்பதில் ஆட்சேபனை இல்லை என்ற சிம்பு, ஆனால் தன் படத்தில் தனுஷ் பாடுவதையும், ஆடுவதையும் தான் விரும்பவில்லை என்று பளிச்சென சொல்லிவிட்டாராம்.

சிம்பு சொன்னதைக் கேட்டதும் செல்வராகவனுக்கு அதிர்ச்சி!

‘தனுஷும் நானும் ப்ரண்ட்ஸ்தான். அதற்காக என் படத்தில் அவர் இருப்பதை நான் அனுமதிக்க மாட்டேன்’ – என்ற சிம்புவின் கறாரான பேச்சைக் கேட்ட செல்வராகவன் என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் அமைதியாக இருந்திருக்கிறார்.

பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை… ‘வேண்டுமானால் தனுஷ் பாடட்டும். ஆனால் டான்ஸ் ஆடக் கூடாது’ என்று பெரிய மனசு பண்ணி சிம்பு இறங்கி வந்திருக்கிறார்.

வேறுவழி இல்லாததினால் சிம்பு போட்ட கண்டிஷனுக்கு கோயில்மாடுபோல் தலையை ஆட்டிவிட்டு வந்திருக்கிறார் செல்வராகவன்.

0 comments:

Post a Comment