விஜய் சேதுபதி, ஜெயப்பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம் நாளை உலகெங்கிலும் வெளியாகிறது. நீண்ட நாட்களாகப் பெரும் எதிர்பார்ப்பில் இருந்துவரும் இப்படம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சுமார் 15ற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.
அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளில் விஜய் சேதுபதியின் படம் வெளியாவதுஇதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. குறும்படமாக எடுக்கப்பட்ட இப்படம் தற்பொழுது திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனரான அருண்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தினை மேஜிக் பாக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஹீரோயினாக ஐஸ்வர்யா நடித்துள்ளார். மேலும் நீலிமா, அட்டக்கத்தி தினேஷ், ஸ்னேகா ஆகியோரும் நடித்துள்ளனர்.
குறும்படமாக எடுக்கப்பட்ட இப்படம் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்புகளுக்குப் பஞ்சமில்லை.
ரசிகர்களின் எதிர்பார்ப்பினை இப்படம் பூர்த்தி செய்யுமா என்பதை நாளை மதியவாக்கில் அறிந்துகொள்ளலாம்.

0 comments:
Post a Comment