ஜீவா, வினய்,சந்தானம், திரிசா மற்றும் ஆண்டிரியா நடிப்பில் கடந்த டிசம்பர் 20ல் வெளியான என்றென்றும் புன்னகை திரைப்படம் தனது ஐம்பதாவது
நாளைக் கடந்துள்ளது.
நட்பு மற்றும் காதலை மையப்படுத்தி வெளியான இப்படம் ரசிகர்களின் கடந்தகால நிகழ்வுகளை மீண்டும் அசைபோட வைத்ததாகப் பாராட்டப்பெற்றது.
அறிமுக இயக்குனர் ஐ.அகமது இயக்கத்தில், ஜி.கே.எம் தமிழ்க்குமரன் மற்றும் டாக்டர் ராமதாஸ் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. முதல் வாரத்தை விட இரண்டாம் வாரத்தில் இப்படத்திற்கு அதிகத் திரையரங்குகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு வருடங்களாக ஜீவாவின் படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறாத நிலையில் இப்படம் அவருக்கு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் மற்ற முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்த திரிசா, வினய் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோருக்கும் இப்படம் நல்ல வாய்ப்பாக அமைந்தது.
ஜீவா தற்பொழுது ரவி.கே.சந்திரன் இயக்கிவரும் யான் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

0 comments:
Post a Comment