உலகநாயகனுடன் ஜோடி போடவிருக்கிறாராம் ‘பூச்சூடவா’ நதியா.
இன்றும் இளமையுடன் இருக்கும் நதியா கமலுடன் மட்டும் இதுவரை நடிக்கவில்லை.
இந்நிலையில் இவர்கள் இருவரும் த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் ஒன்றிணையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையாளப் படத்தில் மோகன்லால் ஜோடியாக மீனா நடித்திருந்தார். அதன் தெலுங்குப் பதிப்பிலும் மீனாதான் நடிக்கிறார். வெங்கடேஷ் ஹீரோ. ஸ்ரீப்ரியா படத்தை இயக்குகிறார்.
அதனால் மீனா தமிழுக்கு வேண்டாம் என கருதுகின்றனர். இதுவரை கமலுடன் நடிக்காத நதியாவை நடிக்க வைக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை எதுவும் உறுதியாகவில்லை.

0 comments:
Post a Comment