Wednesday, 19 February 2014

Leave a Comment

நண்பர்களால் ரூ.85 கோடி இழந்தேன் டைரக்டர் பரபரப்பு புகார்..!



நண்பர்களால் ரூ.85 கோடி சொத்தை இழந்தேன் என கூறியுள்ளார் இயக்குனர் புரி ஜெகன்னாத். போக்கிரி தெலுங்கு படத்தை இயக்கியவர் புரி ஜெகன்னாத். தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்தவர்.

இந்தியிலும் படம் இயக்கியுள்ளார். இவர் திவாலானதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இது பற்றி விளக்கம் எதுவும் அளிக்காமல் இருந்து வந்தார் புரி. இப்போது அது பற்றி அவர் கூறியுள்ளார்.

நண்பர்கள் சிலரின் மோசடியால் ரூ.85 கோடி சொத்துகளை இழந்தேன். இது எனது வாழ்நாளில் மறக்க முடியாத விவகாரம். அதனால் எனது சினிமா தொழிலில் கூட கவனம் செலுத்த முடியாமல் போயிருக்கிறது.

ஆனாலும் சினிமாதான் என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. அதிலிருந்து விலக மாட்டேன். மீண்டும் நல்ல படம் தந்து எனது இடத்தை நான் பிடிப்பேன் என புரி ஜெகன்னாத் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment