ஏ.ஆர். முருகதாஸ் படத்திற்குப் பிறகு சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் விஜய், சமந்தா, சதீஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த 3ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கியது.
இந்த படத்திற்குப் பின்பு சிம்புதேவனின் ஆக்ஷன் மற்றும் காமெடி என வித்தியாசமான கதையில் விஜய் நடிக்கிறார்.இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனேவிடம் பேசப்பட்டது.
தீபிகா ஒரு நாளைக்கு ரூ.1 கோடி சம்பளம் கேட்டதால், அதிர்ச்சியைடந்த தயாரிப்பாளர் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்யும்படி இயக்குநரிடம் கூறினாராம்.தீபிகா படுகோனே கேட்ட சம்பளம் படத்தின் பட்ஜெட் அளவுக்கு இருந்ததால்தான் இந்த அதிர்ச்சி.
தற்போது விஜய்க்கு ஜோடியாக ப்ரியங்கா சோப்ராவிடம் பேசப்பட்டு வருகிறது. கதையை கேட்ட ப்ரியங்கா, விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டார்.
ப்ரியங்கா சோப்ரா, விஜய்க்கு ஜோடியாக ‘தமிழன்’ படத்தில்தான் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் நடிக்க ப்ரியங்கா சோப்ராவுக்கு ரூ.8 கோடி சம்பளமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் 8 கோடிக்காக வந்துவிட்டு விஜய்க்காக வந்தேன் என தற்பெருமை பேசுகின்றாராம் சோப்ரா..!

0 comments:
Post a Comment