Wednesday, 5 February 2014

Leave a Comment

ஆடியோ கோப்புகளை பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளம்..!

ஆடியோ கோப்புகளை பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளம்:-



audioகண்ணால் காண்பதை பகிர்ந்து கொள்ள , பேஸ்புக், வலைப்பதிவுகள் என ஆயிரம் வழி இருக்கிறது. காதால் கேட்பதை பகிர்ந்து கொள்ளவும் வழிகள் இல்லாமல் இல்லை. முன்னோடி ஒலி பகிர்வு தளமான சவுண்டு கிலவுட் உட்பட பல்வேறு இணையதளங்கள் ஆடியோ கோப்புகளை பகிர உதவுகின்றன. இந்த பிரிவில் இப்போது ஆடியூர் தளமும் சேர்ந்திருக்கிறது.

ஆடியூர் , உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஒலி வடிவில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. நீங்கள் பகிர்ந்து கொள்ள உதவும் ஒலியை அதாவது நீங்கள் பதிவு செய்த ஒலியை இந்த தளத்தில் பதிவேற்றினால் போதும் அதற்கென பிரத்யேக இணைய முகவரி உருவாக்கி தரப்படுகிறது. அந்த முகவரியை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். என்ன மாதிரியான ஒலிகளை ,எப்படி பகிர்ந்து கொள்ளலாம் என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.

இணையதள முகவரி; http://audiour.com/

0 comments:

Post a Comment