மீண்டும் டை அடிக்கிறார்
இந்தப் படத்துக்காக மீண்டும் தலைக்கு டை அடிக்கிறார் அஜீத். ஆம்... இதில் அவர் தனது சால்ட் அன்ட் பெப்பர் லுக்கை மாற்றப் போகிறாராம்.
ஹாலிவுட் மயம்
இதுவரை எந்த இந்தியபடமும் இதுபோல் ஸ்டைலிஷாக வரவில்லை என்று சொல்லுமளவிற்கு இதற்காக மேக்கப் மேனிலிருந்து, சண்டை பயிற்சியாளர் வரை அனைவரையும் ஹாலிவுட் கலைஞர்களையே தேர்வு செய்யப் போகிறார்களாம். படப்பிடிப்பு முழுக்க அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாககக் கூறப்படுகிறது.
வில்லன் கார்த்திக்
அஜித்துடன் மோதும் வில்லனாக கார்த்திக் நடிக்க இருக்கிறாராம். ஏற்கெனவே சில படங்களில் இதுபோன்ற வேடங்களை கார்த்திக் ஏற்றிருந்தாலும், இந்தப் படத்தில் அவரும் ஒரு ஹீரோ எனும் அளவுக்கு பாத்திரம் அமையுமாம்.
அஜீத்துடன்...
ஏற்கனவே, கார்த்திக் நடித்த "உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்" படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார் அஜித். அதேபோல, அஜீத் ஹீரோவாக நடித்த ஆனந்தப் பூங்காற்றே படத்தில் கார்த்திக் கவுரவ வேடம் ஏற்றார். தற்போது இந்த இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.
எவ்வளவு பணம் வேண்டுமானாலும்...
அதுமட்டுமின்றி படமும் இதுவரை இல்லாத அளவிற்கு வரவேண்டும் என்பதற்காக பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை உருவாக்க முடிவு செய்துள்ளாராம் ஏஎம் ரத்னம். அஜீத் படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment