Sunday, 9 February 2014

Leave a Comment

யுவனுக்கு நடந்தது என்ன..?



இளையராஜாவுக்கு கார்த்திக்ராஜா, யுவன்சங்கர்ராஜா ஆகிய மகன்களும், பவதாரிணி என்ற மகளும் உள்ளனர். இவர்களும் இசையமைப்பிலும், பின்னணி பாடுவதிலும் ஈடுபட்டுள்ளனர்.

பிரியாணி படத்துடன் 100 படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன்சங்கர்ராஜா, காதலித்து மணந்த முதல் மனைவியை விவாகரத்து செய்தார். பிறகு வேறொரு பெண்ணை மணந்தார். இப்போது அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திடீரென்று யுவன்சங்கர்ராஜா இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டர் மூலம் ரசிகர்களுக்கு விடுத்துள்ள செய்தியில், இப்போது நான் இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளேன்.

இதற்கு என் தந்தை இளையராஜா மற்றும் குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும், 3வது திருமணம் செய்துகொண்டாரா என்பது பற்றி கூறுகையில், எனது 3வது திருமணம் குறித்து வரும் தகவல்கள் வதந்தி என்றார்.

0 comments:

Post a Comment