Thursday, 6 February 2014

Leave a Comment

'ஜெகஜால புஜபல தெனாலிராமன்' படத்திற்காக வடிவேலு பாடிய பாடல்..!



நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'வைகைப்புயல்' வடிவேல் தற்போது 'ஜெகஜால புஜபல தெனாலிராமன்'' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் மன்னன் மற்றும் புத்திசாலி மந்திரி இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் வடிவேலு நடிக்கிறார். இதில் வடிவேலுக்கு ஜோடி மீனாக்ஷி தீக்ஷித். இவர் ஒரு மும்பை நடிகை. இவர், ஏற்கெனவே 'பில்லா 2' படத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தை யுவராஜ் தயாளன் இயக்குகிறார். இவர் ஜெயம் ராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். யுவராஜ் 'போட்டா போட்டி' என்ற திரைப்படத்தை ஏற்கெனவே இயக்கியுள்ளார். 'ஜெகஜால புஜபல தெனாலிராமன்' இவர் இயக்கும் இரண்டாவது படம். காமராவைக் கையாள்பவர் ராம்நாத் ஷெட்டி. இந்தப் படத்துக்கு டி. இமான் இசையமைக்கிறார்.

வடிவேலு சொந்தக் குரலில் பாடும் கலக்கலான பாடல் ஒன்று சமீபத்தில் ஜெபுஜெ திரைப் படத்திற்காக பதிவு செய்யப்பட்டது. இந்தப் பாடல் எழுபதுகளில் வந்த சூப்பர் ஹிட் பழைய தமிழ்ப்பாடல் ஒன்றின் மெட்டில் அமைக்கப்பட்டுள்ளதாம். வடிவேலு ஒருவாரப் பயிற்சிக்குப் பின் இந்தப் பாடலைப் .பாடியுள்ளாராம்.

நிச்சயம் இந்தப் பாடல் சூப்பர் ஹிட் பாடல் வரிசையில் இடம்பெறும் என்கின்றனர் படக்குழுவினர். ஜெபுஜ திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 2014 ஏப்ரல் மாதத்தில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment