Sunday, 9 February 2014

Leave a Comment

“கேர்ள்ஸ் வெட்கப்பட கூடாது!” - நச் நஸ்ரியா...!



” ‘ஏன்தான் இந்த சினிமாவுக்கு வந்தோம்’னு ஃபீல் பண்றீங்களா?”

”இல்லை. ஆனா, ‘நய்யாண்டி’ டீம்கூட ஏன் வொர்க் பண்ணோம்னு ரொம்பவே ஃபீல் பண்றேன்!” – ‘ஒதுங்கிச் செல்பவள் அல்ல; எகிறி அடிக்கும் ஏஞ்சல் நான்’ என்று ஒவ்வொரு வார்த்தையிலும் உணர்த்துகிறார் நஸ்ரியா.

‘நய்யாண்டி’ தொப்புள், ஜெய்யுடன் காதல், ஜீவா படத்தில் இருந்து நீக்கம்… என நஸ்ரியாவைச் சுற்றி எப்போதும் இடி, மின்னல், புயல்தான். ஆனால், ”எப்பவுமே நான் இப்படித்தான்” என சிரிக்கிறார் நஸ்.

”நீங்க பரபரப்பு கிளப்பின அளவுக்கு ‘நய்யாண்டி’ படத்தில் எந்தக் காட்சிகளும் இல்லையே… எதற்கு அந்த பப்ளிசிட்டி?”

”அந்தப் படத்தில் நடிக்கிறதுக்கு முன்னாடியே, ‘இப்படில்லாம் நடிக்க மாட்டேன்’னு தெளிவா சொல்லிட்டேன். அதுக்கு அவங்களும் ஓ.கே. சொன்ன பிறகுதான் அக்ரிமென்ட் சைன் பண்ணினேன். என் தோழிகள்தான் ‘நய்யாண்டி’ டிரெய்லர் பார்த்துட்டு ‘இந்த மாதிரி ஒரு சீன் இருக்கு’னு சொன்னாங்க. நான் டைரக்டர் சற்குணத்துக்கிட்ட, ‘அந்த சீன்ல நான் நடிக்கவே இல்லையே! படம் ப்ரிவியூ பார்க்க முடியுமா?’னு கேட்டேன். ‘நீ வரலை… அதனால டூப் வெச்சு எடுத்துட்டோம். படத்தை முன்னாடியே காட்ட முடியாது’னு சொன்னார். அந்த ஈகோதான் பிரச்னைக்குக் காரணம். சினிமாவில் பணம் முக்கியம்தான். ஆனா, அதைவிட நம்பிக்கை ரொம்ப முக்கியம். ‘நய்யாண்டி’யில எனக்கு நடந்தது நம்பிக்கை மோசடி. அதைப் பத்தி இனிமேல் பேசி எந்தப் பயனும் இல்லை!”


”படமும் நல்ல ரிசல்ட் கொடுக்கலையே?!”

”இந்த மாதிரி சீட்டிங் இல்லாமப் பண்ணியிருந்தா, நல்லா வந்திருக்குமோ என்னவோ!”

”’தமிழ் சினிமாக்களில் நஸ்ரியாவை கமிட் பண்ண யோசிக்கிறாங்க’, ‘ஜீவா நடிக்கும் படத்தில் இருந்து விலக்கிட்டாங்க’னு உங்களைப் பற்றி பரவும் செய்திகள் உண்மையா?”

”எல்லாம் வதந்திகள். இப்பவும் தமிழ் சினிமாவில் நிறையப் பேர், ‘என் சப்போர்ட் உனக்குத்தான்’னு சொல்றாங்க. நிறைய தமிழ் படங்களில் நடிக்கக் கேட்டு வர்றாங்க. ஆனா, எல்லாமே ‘ராஜா ராணி’ பட கேரக்டரோட ஜெராக்ஸ். அதான் யோசிக்கிறேன். இன்னொரு விஷயம், ஜீவா படத்தில் நான் நடிக்கிறேன்!”

” ‘நான் ஒரு மலையாளியைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்’னு லட்சுமி மேனன் சொல்றாங்க. நீங்க ‘நய்யாண்டி’ விவகாரத்தில் அதிரடி பண்ணிட்டீங்க. கேரள சேச்சிகள் அந்த அளவுக்கு ஸ்ட்ரிக்ட்டா… இல்லை, தமிழ்நாட்டில் மட்டும் இப்படிக் கோபப்படுவீங்களா?”

”கேரளாவில் எதுவா இருந்தாலும் முகத்துக்கு நேரா சொல்லிடுவோம். சும்மா சும்மா வெட்கப்பட்டுட்டு இருக்க மாட்டோம். மத்தவங்களைப் பத்தி வம்பு பேச மாட்டோம். கேரளப் பொண்ணுங்கனு இல்லை… எல்லாப் பொண்ணுங்களும் கண்டிப்பா ஃபாலோ பண்ணவேண்டிய நல்ல விஷயம் இது!”

”இவ்வளவு போல்டா இருக்கீங்க… ஜெய்க்கும் உங்களுக்கும் காதல்னு உலவும் வதந்தி பத்தியும் உண்மை சொல்லுங்களேன்!”’

”அவரை லவ் பண்ணா… அதைக் கண்டிப்பா சொல்லிருவேன். ஆனா, இல்லையே… என்ன பண்ண? ஜெய், என் ஃப்ரெண்ட். என் வீட்ல எல்லாருக்கும் நல்ல அறிமுகம். அவ்ளோதான்!”

”நஸ்ரியானா என்ன அர்த்தம்?”

”அது உருதுப் பேர். கண்ணை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகர்த்த முடியாத அளவுக்கு அழகுனு அர்த்தம்!”

0 comments:

Post a Comment