மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் மீரா ஜாஸ்மின். தற்போது தமிழில் விஞ்ஞானி, மலையாளத்தில் இதுக்கு அப்பறம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அவருக்கும், துபாய் சாப்ட்வேர் இன்ஜினியர் அனில் ஜான் டைட்டஸ் என்பவருக்கும் நாளை திருமணம் நடைபெறுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில், கொச்சியில் இருக்கும் மீரா ஜாஸ்மின் வீட்டுக்கு சார்பதிவாளர் ஒருவர் வந்தார்.
அப்போது மீரா ஜாஸ்மின், அனில் ஜான் டைட்டஸ் இருவரும் ஒருவரது கழுத்தில் ஒருவர் மாலை மாற்றி ரகசிய திருமணம் செய்துகொண்டனர். இதை, சிறப்பு திருமணச் சட்டப்படி சார்பதிவாளர் பதிவு செய்தார்.
அவர் கொண்டு வந்த புத்தகத்தில் மீரா ஜாஸ்மின், அனில் ஜான் டைட்டஸ் இருவரும் கையெழுத்து போட்டனர். இந்நிகழ்ச்சியில் இரு வீட்டைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
இதை தொடர்ந்து ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி மீரா ஜாஸ்மின், அனில் ஜான் டைட்டஸ் திருமண சடங்குகள், திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள எல்.எம்.எஸ் சர்ச்சில், நாளை காலை 11 மணியளவில் நடைபெறுகிறது.
மதியம் 1 மணியளவில் மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. திருமணத்துக்கு பிறகும் மீரா ஜாஸ்மின் சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என்று தெரிகிறது.

0 comments:
Post a Comment