Saturday 15 February 2014

Leave a Comment

எச்சரிக்கை - சாக்லெட்டு சாப்பிடுவதற்கு முன்பு பாருங்க..!



பிரித்தானியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் வாங்கிய Cadbury's சொக்லெட்டுக்குள் குளவி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரை சேர்ந்த ஜேக் கியேட்டிங் என்னும் 20 வயது மாணவர் அப்பகுதியில் உள்ள சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் Cadbury's Dairy Milk Chocolate ஒன்றை வாங்கினார்.


அதன் கவரை பிரித்து சாக்லெட்டை சுவைக்க நினைத்த ஜேக்கிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. சாக்லெட்டின் ஒரு பகுதி மட்டும் வழக்கத்துக்கு மாறாக புடைத்துக் கொண்டிருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தார்.

அந்த பகுதியை பார்த்த ஜேக் கியேட்டிங் அதிர்ச்சியால் உறைந்துப் போனார். அந்த சாக்லெட்டுக்குள் இறக்கை, கால் மற்றும் தலையுடன் ஒரு முழு குளவி செத்துப்போய் கிடந்தது. இதனை உடனடியாக அவரது மொபைல் கேமராவில் படமெடுத்த ஜேக் , இது குறித்து விளக்கம் கேட்டு கேட்பரீஸ் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பினார்.


இதனையடுத்து, தங்கள் நிறுவனத்தின் சார்பில் ஒரு உயரதிகாரியை ஜேக் கியேட்டிங்-கிடம் அனுப்பி வைத்த கேட்பரீஸ் நிறுவனம் அந்த சாக்லேட்டை பரிசோதனைக்காக வாங்கி வைத்துள்ளது.

பரிசோதனையின் முடிவுக்கு பின்னர் இந்த தவறு எங்கு? எப்படி நேர்ந்தது? என்பதை கண்டறிந்து, அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்பரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment