தீயா வேலை செய்யணும் குமாரு வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கும் படம் அரண்மனை. இந்தப் படத்தை அவரே இயக்கி நடிக்கவும் செய்கிறார்.
இன்னொரு நாயகனாக வினய் நடிக்கிறார். ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் மூன்று பேரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். த்ரில்லராக உருவாகி வரும் இந்தப்படத்தில் ஹன்ஷிகாவுக்கு சந்திரமுகி ஜோதிகா மாதிரி சவாலான வேடமாம். அதாவது, எதிர்காலத்தில் நடக்கபோவதை முன்கூட்டியே உணர்வது மாதிரியான அபூர்வ சக்திகள் கொண்ட பெண்ணாக நடிக்கிறாராம் ஹன்சிகா. அதனால, தன்னுடைய கேரக்டரில் முழு ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறாராம்.
அதுமட்டுமின்றி, தாவணி கட்டிக்கொண்டு, நெற்றியில் பெரிய அளவில் குங்குமம் வைத்துக்கொண்டு பார்க்கவே வித்தியாசமான ஹன்சிகாவாக ரசிகர்களுக்கு தெரிவாராம். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் ஹன்சிகாவின் நடிப்பு மிரட்டலாக இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.
முக்கிய வேடத்தில் சந்தானம், நிதின் சத்யாவும் நடிக்கிறார்கள். வில்லன்களாக பருத்திவீரன் சரவணன், ராஜ்கபூர், விச்சு நடிக்க பரத்வாஜ் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். சுந்தர்.சியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான யு.கே.செந்தில்குமார் தான் ஒளிப்பதிவு செய்கிறார். சுந்தர்.சிக்கு ஜோடியாக லட்சுமிராய் நடிக்கிறார். தனது வழக்கமான காமெடி பாணியிலிருந்து விலகி இதனை ஒரு த்ரில்லார் படமாக இயக்குகிறார் சுந்தர்.சி.

0 comments:
Post a Comment