Friday, 14 February 2014

Leave a Comment

முதல்முறையாக அஜித் - ஹரி இணையும் ’அடங்காதவன்’..!

அஜித் - ஹரி இணையும் ’அடங்காதவன்’!


சிங்கம் 2 திரைப்படத்தின் மாபெரும்வெற்றிக்குப் பிறகு ஹரி எந்த ஹீரோவை வைத்து எந்த மாதிரியான திரைப்படம் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு  ரசிகர்களிடத்தில் அதிகமாகவே காணப்பட்டது. அதேபோல் ‘ஆரம்பம், ‘வீரம்’ என அஜித்  இரு படங்களைப் பற்றியும் தெரிந்துவிட்டதால், அஜித்தின் அடுத்த படம் பற்றியும் ரசிகர்கள் எதிர்பார்க்க துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அஜித்- ஹரி கூட்டணியில் ‘அடங்காதவன்’ திரைப்படத்தை தயாரிப்பதாக ஒரு போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்த போஸ்டர் உண்மையானதாக இருந்தால் அஜித்தும், ஹரியும் இணையும் முதல் திரைப்படம் அடங்காதவன். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக கூறப்படும் இத்திரைப்படத்தின் ஹீரோயின் யார் என்பது தெரியவில்லை. விஷ்ணுவர்தன் திரைப்படத்தில் செய்தது போல் இல்லாமல் டைட்டிலை முதலில் தெரிந்து கொண்டுவிட்டதால் ரசிகர்கள் திருப்தியில் இருக்கின்றனர்.

மேலும் அடங்காதவன் என்ற டைட்டில் அஜித்தின் உண்மையான குணாதசியங்களில் ஒன்று என்று சுட்டிக் காட்டுவதோடு, அஜித்தின் கெட்- அப்பை பார்த்து மிரண்டுப்போய் இருக்கிறார்கள் தல ரசிகர்கள்....

0 comments:

Post a Comment