இச் செய்தி பற்றி சொல்வதற்கு முன்பு ஒரு சில வருட காலத்தை பின் நோக்கி செல்ல வேண்டிய சூழ்நிலை கண்டிப்பாக வேண்டும் என நினைக்கிறேன்.
தன்னைப் பற்றி சிந்திக்கும் மனிதர்கள் மத்தியில் தன்னை சுற்றி இருக்கும் மனிதர்களை மகிழ்வித்து பார்ப்பவர் நம்ம 'தல' அஜித். உதாரணத்துக்கு ஏக பட்டது இருக்கு ஆனால் அதெல்லாம் விளம்பரமாக வடிவமைக்க எப்போதும் விரும்பாத மனிதர்.
அப்படி பட்டவரை சில பேர் தப்பாக நினைப்பதும் உண்டு. ஆமாங்க ஏகன் படம் முடிந்து பிறகு கௌதம் மேனன் உடன் படம் பண்ண சூழ்நிலை வந்தது. பல மாதங்கள் கதை சொல்லாமல் இழுத்து அடிக்க ஏதோ ஒரு காரணத்தினால் இரண்டு பெரும் அன்று ஒன்று சேர முடியாமல் போனது.
அதற்கு பிறகு சில நாளிதழில் மற்றும் காலேஜ் விழாக்களில் தல பற்றி சில தவறான கருத்தை முன் வைத்தார் கௌதம் மேனன். காலங்கள் கடந்து செல்ல மீண்டும் கௌதம் மேனன் – சூர்யா இணையும் தருவாய் வந்தது, தனக்கு ஒரு தருணத்தில் வாழ்க்கை கொடுத்தவர் என்றல்லாம் மறந்து இந்த கதை எனக்கு திருப்தி தரவில்லை என்று படத்தை ட்ராப் செய்து விட்டார் சூர்யா.
ஏற்கனவே சில படங்கள் எடுத்து பல அடிகள் வாங்கி இந்த படம் என் மார்கெட்டை தூக்கும் என நம்பிக்கையில் இருந்தார். சூர்யாவின் பதில் அவரின் பயணத்தில் ஒரு இடியாய் இடிக்க என செய்வது என்று தெரியாமல் திகைத்தார்.
இந்த தருணத்தில் தான் தலயின் காதுக்கு சூர்யா படம் ட்ராப் ஆன தகவல் செல்ல, உடனே கௌதம்க்கு போன் செய்து எ.ம் ரத்னம் ஆபீஸ்க்கு செல்லுங்கள், நம்ம இந்த தடவை படம் பண்றோம், எல்லாத்தையும் ஒரு பாஸிடிவ் மாத்துவோம் என்று எனக்குள் ஒரு உத்வேகத்தை உண்டாக்கினர்.
அவர் படம் பண்றோம்னு சொல்லும் போது அவருடைய லிஸ்ட்லே மூணு முன்னணி இயக்குனர்கள் இருந்தாங்க சத்தியமா அந்த லிஸ்ட் லே நான் இல்லவே இல்ல என்பது உண்மை.
எதையுமே மனசுல வெச்சுக்காம நம்ம ஒன்னு சேரலாம்னு சொல்றதுக்கு ஒரு மனசு வேணும் அந்த மனசு அஜித் கிட்ட இருக்கு என்று தெரிவித்தார் கௌதம் மேனன.

0 comments:
Post a Comment