Sunday, 9 February 2014

Leave a Comment

பாலிவுட்டில் விஜய்- த்ரிஷா..!


இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்.

2004ம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சக்கை போடு போட்டது.

தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா ஜோடியாக நடித்த இப்படத்தில் பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

கில்லி படம் விஜய்யின் வெற்றிப்படத்தில் முக்கியமான படமாகும். தற்போது இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. விஜய் கேரக்டரில் அர்ஜூன் கபூர் நடிக்கிறார்.

இவர் நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூரின் முதல் மனைவியின் மகனாவார்.

0 comments:

Post a Comment