குயில் போல் பாடும் திறன், தெறிகெட்டு ஆடும் அழகு இவை ரெண்டும் ரெக்கை கட்டி பறந்தால் எப்படி இருக்கும், அப்படிபட்ட ஒரு திறமை உள்ள நடிகை ஆண்ட்ரியா.
இவர் என்றென்றும் புன்னகை படத்தில் ஒரு பாடலுக்கு ஆடிய ஆட்டத்தை பார்த்த ரசிகர்களுக்கு கண்களில் ஆனந்த கண்ணீரை வர வைத்தது. எங்க மா இருந்த நீ இத்தனை நாள் என்று கோடம்பாக்கம் புள்ளிகளே கூட முணுமுணுத்தர்கள்.
இதை அறிந்த ஆண்ட்ரியா கப்சிப் என்று கமுக்கமாக இருந்தார். சில முன்னணி கம்பெனிகள் ஆண்ட்ரியாவின் வாசல் படியை தாண்ட ஆரம்பித்தனர், ஆனால் அவர் சொன்ன சம்பளத்தை கேட்டு தயாரிப்பார்கள் படி தாண்ட மாட்டாள் இந்த பத்தினி என்று பேக் அடிக்க தொடங்கினர்கள்.
கடைசியாக சசிகுமாரை இயக்கி கொண்டு இருக்கும் சாக்ரடீஸ் ஆண்ட்ரியாவின் வாசல் கதவை தட்ட ஆண்ட்ரியாவும் தாரளமாக கதவை திறந்தார், சரி என்று உள்ள நுழைந்த சாக்ரடீஸ்க்கு அவர் சொன்ன சம்பளம் அதாவது ரூ. 25 லட்சம் சற்று ஷாக்காக தான் இருந்தது.
ஆனால், ஆடலுடன் பாடலும் நான் தான் பாடுவேன் என்று சொன்னதால் இந்த டீலிங் அவருக்கு பிடித்து போக கடைசியில் சசிகுமாரிடம் பேசி டீலிங் முடித்து கொண்டார்.
ஆக மொத்தத்தில் ஆண்ட்ரியாவின் ஐட்டம் டான்ஸ் பிரம்மன் படத்தில் பார்க்கலாம்...

0 comments:
Post a Comment