சூப்பர் ஸ்டாரின் மகளான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்துவரும் வை ராஜா வை திரைப்படத்தின் வில்லனாக டேனியல் பாலாஜி நடிக்கவுள்ளார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான காக்க காக்க மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படங்களில் நடித்தவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தில் முக்கிய வில்லனாக இவர்
நடித்திருந்தார். அப்படத்தில் இவரின் நடிப்புத்திறமை பெருமளவில் பாராட்டப்பட்டது.
இவர் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிவரும் வை ராஜா படத்தின் வில்லனாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. வை ராஜா படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.
ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் இப்படத்தைத் தயாரித்துவருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு
இசையமைத்துவருகிறார்.

0 comments:
Post a Comment