கருப்பு, வெள்ளை என கலர் கலராக சம்பளம் வாங்கும் நம் கதாநாயகன்களுக்கு காசு…பணம்…துட்டு…மணி… மீதான ஆசை அடங்கவே அடங்காது போலிருக்கிறது.
பல கோடி சம்பளம் வாங்கும் பட நாயகன்கள் வேறு எந்தெந்த வழிகளில் எல்லாம் பணம் பண்ணலாம் என்று ஆளாய்ப் பறக்கிறார்கள்.
அதிலும் லட்சங்களில் சம்பளம் வாங்குபவர்களைவிட, கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஹீரோக்களுக்குத்தான் பணத்தாசை பல மடங்கு அதிகமாக இருக்கிறது.
குறிப்பாக, முன்னணி வரிசையில் இருக்கும் அந்த இளம் ஹீரோ பற்றி அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர் சொன்ன தகவல் அடேங்கப்பா ரகம்!
படம் வெளியான முதல் வாரம் சென்னை உட்பட அனைத்து ஊர் தியேட்டர்களிலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாகவே வசூலிக்கிறார்கள்.
சென்னையைத் தாண்டிய ஊர்களில் கூட்டம் அலைமோதும்போது, கூடுதல் இருக்கைகளை (எக்ஸ்ட்ரா சேர்) போட்டு ஆட்களை உட்கார வைப்பார்கள்.
இப்படி ‘ஓவர்’விடுவதன் மூலம் அரசுக்கு வரிகட்டாமலே பெரும்தொகையை சம்பாதிப்பார்கள். இந்தப் பணத்தை தியேட்டர் உரிமையாளரும், விநியோகஸ்தரும் இதுநாள்வரை பங்குபோட்டுக் கொண்டிருந்தனர்.
இப்படி சேரும் கள்ளப்பணத்தில்தான் கையை வைத்திருக்கிறார்கள் சில ஹீரோக்கள்.
தங்களின் நாலெட்ஜுக்கு வராமல் இப்படி எல்லாம் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, அதிலும் எங்களுக்கு பங்கு தர வேண்டும் என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்களாம் இளம் ஹீரோக்கள்.
தீபாவளி, பொங்கல் வெளியீடாக வந்த படங்களில் நடித்த முன்னணி ஹீரோக்கள் சிலர் கள்ளப்பணம் மூலமாக சில கோடிகள் கல்லா கட்டி இருக்கிறார்கள்.

0 comments:
Post a Comment