இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் 50படங்களை தொட்டுவிட்டார். அட்லியின் இயக்கத்தில் ஜி.வி.யின் 50வது படம் உறுதி செய்யப்பட்டுவிட்டது. இவர்கள் கூட்டணி ராஜாராணி படத்திலேயே நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இப்படம் குறித்து ஜி.வி. கூறுகையில் இந்த படம் ஒரு பெரிய தயரிப்பாகவும் அதில் முன்னனி நாயகன் நடிக்கவுள்ளார்.அது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என கூறினார்.
இதில் செய்தி என்னவென்றால் ஏற்கெனெவே அட்லி நடிகர் விஜயிடம் ஒரு கதையை கூறியுள்ளாராம். அந்த கதை விஜய்க்கு பிடிக்கவே அட்லியின் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் ,அதனையடுத்து சிம்புதேவன் படம் என பிஸியாக இருப்பதால் இவ்விருபடங்களை அடுத்து அட்லியின் இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது.

0 comments:
Post a Comment