Thursday, 13 February 2014

Leave a Comment

நான் அவன் இல்லை ஜீவன் தூதனாக மீண்டும் வருகிறார்....!


நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீவன் நாயகனாக நடிக்கும் படம் தூதன்.

இதில் நாயகியாக பிரபல கன்னட நடிகை ஜெயமாலா மகள் சௌந்தர்யா அறிமுகமாகிறார். ஆனால் இதற்கு முன்பு கன்னடத்தில் நடிப்பிலும், கவர்ச்சியிலும் ஏற்கெனவே கலக்கியவர்தான் செளந்தர்யா.

கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் செல்வா. இவர் இயக்கும் 27 வது படம் இது. ஏற்கெனவே ஜீவன் – டைரக்டர் செல்வா இருவரும் இணைந்து நான் அவனில்லை – 1, 2 என இரண்டு பாகங்களை வெற்றிப் படங்களாகக் கொடுத்தவர்கள். இருவரும் தற்போது 3வது முறையாக ஒன்று சேருகிறார்கள்.

பிரபல நடிகர்களை வைத்து பல படங்களின் தயாரித்தவர் வி.சுந்தர். அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலப் படங்களை இந்தியா முழுவதும் வெளியிட்டுள்ளார். அவர்தான் இப்படத்தைத் தயாரிக்கிறார். அவர் சன் மூன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக இப்படத்தைத் தயாரிக்கிறார்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்….

“உன்னை அறிந்தால் – நீ

உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம் –

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ – வாழலாம் என்கிற என்.ஜி.ஆர்.பாடி நடித்த பாடல் வரிகளேயே கதைக்களமாக்கி இருக்கிறேன் என்றார் செல்வா.

படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

0 comments:

Post a Comment