சில வருடங்களுக்கு முன் ஒருநாள்….!
கமலிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு ரகசியத்தைச் சொன்னார்.
அதை இங்கே எழுதுவது சரியா என்று தெரியவில்லை. ஆனால் இந்த செய்திக்கு அந்த சம்பவம் அவசியம் என்பதால் அதை சொல்லியே ஆகணும்.
”ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? ரஜினியை முதன்முதலில் ஒரு கோடி சம்பளம் கேட்கச் சொன்னதே நான்தான். புரட்யூஸர்கள் நம்மளை வச்சு கோடிகோடியாய் சம்பாதிக்கிறாங்க ரஜினி. நீங்க தைரியமா ஒரு கோடி கேளுங்கன்னு சொன்னேன். அப்புறம்தான் அவர் கோடி ரூபாய் சம்பளம் வாங்க ஆரம்பிச்சார்.”
- இதுதான் அன்று கமல் சொன்ன விஷயம்.
கமல் கலைஞனாக மட்டுமல்ல, ஒரு வியாபாரியாகவும் பல விஷயங்களை ‘முதலில்’ செய்தவர் என்ற பெருமைக்குரியவர்.
நடிப்புக்குக் கூலியாய் நடிகர்கள் பணத்தை மட்டுமே வாங்கிக் கொண்டிருந்தபோது, படத்தின் ஏரியாவை வாங்கியவர் கமல்.
வாங்கிய ஏரியாவை கூடுதல் லாபத்துக்கு விற்றது, தானே படத்தை வெளியிடுவது என திரைப்பட வியாபாரத்தையும் ஒரு கை பார்த்தவர்.
அடுத்த கட்டமாக, எப்.எம்.எஸ். என்கிற வெளிநாட்டு ஏரியா உரிமையை எனக்கே கொடுக்க வேண்டும் என்பதை கண்டிஷனாக்கிய கதாநாயகனும் கமல்தான்.
அப்படி வாங்கிய வெளிநாட்டு விநியோக உரிமையை ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாய் பிரித்து விற்று பெரிய லாபம் பார்த்தார்.
இதை எல்லாம் கமல் செய்தது, 100 படங்களில் நடித்து முடித்த பிறகுதான்.
0 comments:
Post a Comment