Wednesday, 26 February 2014

Leave a Comment

தல அஜீத்க்கு ஜோடி அனுஷ்கா இல்லை..? சொல்லியடிச்ச சமந்தா..!



கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது.

இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அனுஷ்கா நடிப்பதில் ஒரு பிரச்சனை ஏற்பட்டது.

அனுஷ்கா தெலுங்கில் இரண்டு சரித்திர படங்களில் நடித்து வருகிறார். அதற்காக மொத்தமாக டேட்ஸும் கொடுத்துவிட்டார். இரண்டு படங்களிலுமே அனுஷ்காவுக்கு நல்ல சம்பளமும் கூட.

அஜீத் படத்தில் நடிக்க அனுஷ்கா ஆர்வமாக இருக்கின்றபோதிலும் அவரால் கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை. அதனால் பட வாய்ப்பை ஏற்க முடியாமல் உள்ளார்.

அஜீத்துடன் விரைவில் நடிப்பேன் என்று கௌதம் மேனனின் மனம் கவர்ந்த நாயகி சமந்தா அண்மையில் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அது எப்படி விரைவில் என்று வியந்தவர்களுக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

கௌதம் படத்தில் அவரது ஆஸ்தான நாயகி சமந்தா தான் அஜீத் ஜோடியாக நடிக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. கௌதம் மேனன் தான் என் ரோல் மாடல் என்று சமந்தா முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கௌதம் தனது படத்தில் நடிக்குமாறு சமந்தாவிடம் கேட்டாராம். ரோல் மாடல் கேட்டு இல்லை என்றா கூற முடியும். அதனால் விஜய், சூர்யா படங்களில் நடித்து வரும் சமந்தா கௌதமுக்காக டேட்ஸை அட்ஜெஸ்ட் செய்கிறாராம்.

0 comments:

Post a Comment