ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடித்துவரும் புதிய திரைப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர்களான அர்ஜுன் ராம்பால் அல்லது இர்ஃபான் கான் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான தில்லாலங்கடி படத்திற்குப் பிறகு தனது அண்ணன் ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் ஜெயம் ரவி நடித்துவருகிறார். இப்படத்தின் வில்லன் கேரக்டர் மிகச் சிறப்பாகப் பேசப்படுமென்றும், அதற்கு மிகத் திறமையான நடிகர் தேவைப்படுவதால் பாலிவுட்டின் முக்கிய நடிகர்களான அர்ஜூன் ராம்பால் மற்றும் இர்ஃபான் கான் ஆகியோரை அணுகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜெயம் ரவி நடிப்பில் வருகிற பிப்ரவரி 14 காதலர் தினத்தில் நிமிர்ந்து நில் திரைப்படம் வெளியாகவுள்ளது. மேலும் என்.கல்யாணகிருஷ்ணன்
இயக்கத்தில், ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்துவரும் பூலோகம் திரைப்படத்திலும் நடித்துவருகிறார். இப்படத்தில் திரிசா இவருக்கு ஜோடியாக
நடித்துவருகிறார்.
ஜெயம் ரவி - ஜெயம் ராஜா திரைப்படத்திற்கு யார் வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற செய்தி விரைவில் அறிவிக்கபடும் என்று தெரிகிறது.

0 comments:
Post a Comment