எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கொரு இடம் வேண்டும் என்று பாடல் யுவன் வாழ்க்கையில் கடந்த காலங்கள் முழவதும் ஒலித்து கொண்ட தான் இருந்தது.
பல மாதங்கள் தன் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான அனுபவத்தால் துக்க நிலைக்கு தள்ள பட்ட யுவன் ஒரு நண்பரின் அறிமுகத்தால் இஸ்லாமியர் மதத்தை பற்றி அறிய நேர்ந்தது. தனக்கு எதோ ஒரு விதத்தில் ஒரு ஆத்மா திருப்தி கொடுத்த இஸ்லாமியர் மதம் தன்னை அர்பணிக்க முடிவு செய்தார்.
இது நடந்து கிட்டத்தட்ட ஒன்றை மாதம் ஆகிவிட்டது ஆனால் சமிபத்தில் நடைபெற்ற விஷ்ணுவர்தனின் தம்பியான கிருஷ்ணாவின் கல்யாணத்தில் தான் வெளி உலகக்கு தெரிய நேரிட்டது.
இந்த கலயாணத்தில் இஸ்லாமியர் மத சார்ந்த பெண் ஒருவருடன் வந்த யுவன் அது அவரது மனைவி என்றும் 3வது கல்யணம் செய்து விட்டார் எனவும் பரவலாக பேசப்பட்டது.
இதை அறிந்த யுவன் தனது ட்விட்டேர் தளத்தில் இன்று எல்லாரோடைய வினாவுக்கு விடை அளித்து உள்ளார்.
ஆம் நான் இஸ்லாமியர் மதத்துக்கு மனம் (மதம்) மாறியுள்ளேன் மற்ற படி 3வது கல்யாணம் பற்றியான செய்தி துள்ளியும் உண்மை இல்லை என்று தெரிவித்தார்.
கண்டிப்பாக என்னுடைய மாற்றத்துக்கு எந்த வித எதிர்ப்பும் என் அப்பா தெரிவிக்க வில்லை என்றும் தெரிவித்தார்..!

0 comments:
Post a Comment