சென்சார் குழுவினரை சிரிப்பால் கலங்கடித்துவிட்டதாம் ‘இது கதிர்வேலன் காதல்’ திரைப்படம்.
உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா இணைந்து நடிக்கும் நகைச்சுவை காதல் படம் ‘இது கதிர்வேலன் காதல்’.
‘சுந்தரபாண்டியன்’ வெற்றிப்படத்தை கொடுத்த எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள இப்படத்தில் உதயநிதி தீவிர அனுமார் பக்தனாக நடித்துள்ளார்.
தனது வழக்கமான கொமடியுடன் சந்தானம் கலக்க உள்ள இப்படம் சென்சார் அதிகாரிகளை சிரிப்பில் கலங்கடித்துவிட்டதாம்! க்ளீன் ‘யு’ சான்றிதழ் வாங்கியுள்ள இப்படம் காதலர்கள் தினமான வரும் பிப்ரவரி 14ம் திகதி வெளியாகவுள்ளது.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வழக்கம்போல் இப்படத்தின் பாடல்களும் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

0 comments:
Post a Comment