மூடர் கூடம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் நவீனிற்கு இன்று ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையானார்.
கடந்த 2013ல் செண்ட்ராயன், நவீன் மற்றும் ஓவியா ஆகியோர் நடிப்பில் வெளியானது மூடர்கூடம். ப்ளாக் ஹியூமர் வகையான இப்படம் விமர்சகர்களால் மிகவும் போற்றப்பட்டது. தமிழ் சினிமாவின் தவிர்க்க இயலாத திரைப்படம் எனவும் ரசிகர்களால் இப்படம் பாராட்டப்பட்டது நினைவிருக்கலாம். இயக்குனர் நவினே தயாரித்திருந்த இப்படத்தினை பாண்டிராஜின் பசங்க புரொடக்சன்ஸ் வெளியிட்டது.
இயக்குனர் நவீன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தான் தந்தையானது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். “ சிந்து எனக்கு ஒரு பெண் குழந்தையைப் பரிசளித்துள்ளார். இப்பொழுது நான் தந்தை” என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment