இந்த நடிகைகளே இப்படித்தான்…!
தமிழ்ப்படங்களில் போர்த்திக் கொண்டு நடிப்பவர்கள், தெலுங்கு, ஹிந்திப் படங்களில் கைக்குட்டையை அணிந்து கொண்டு நடிப்பார்கள்.
நடிகைகளால் வஞ்சிக்கப்படும் தமிழக ரசிகர்களுக்கு ஒரே ஆறுதல்… நம் நடிகைகள் கவர்’ச்சீய்ய்ய்’யாக நடித்த பிறமொழிப் படங்கள் தமிழில் டப் செய்யப்படுவதுதான்.
தமிழ்ப்படங்களில் காட்டாத ‘திறமையை’ நிச்சயமாக பிறமொழிப்படங்களில் நம் கதாநாயகிகள் ‘காட்டி’ இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் இந்த டப்பிங் படங்களுக்கு தமிழ்நாட்டில் எப்போதுமே வரவேற்பு உண்டு.
அந்த நம்பிக்கையில்தான், ஷகிலாவை மிஞ்சுகிற அளவுக்கு ‘பத்மபூஷன்’ கமலின் மகள் ஸ்ருதிஹாசன் நடித்த ‘டி டே’ என்ற ஹிந்திப்படத்தை தமிழில் ‘தாவூத்’ என்ற பெயரில் டப் செய்கிறார்கள்.
இப்படத்தின் விளம்பரம் நேற்று சில நாளிதழ்களில் வெளியானநிலையில், ‘தாவூத்’ படத்தை தடை செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
‘என் அனுமதி இல்லாமல் நான் நடித்த டி டே படத்தை தமிழில் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருப்பதாகவும், அதற்கான வேலைகளில் ஈடுபட்டு இருப்பதாவும், ஈமெயிலில் தகவல் அனுப்பி இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
ஒரு படத்தை பிறமொழியில் வெளியிடுவதும், வெளியிடாமல் இருப்பதும் தயாரிப்பாளரின் உரிமை.
அதில் நடிகை தலையிட முடியுமா..?
0 comments:
Post a Comment