Thursday, 6 February 2014

Leave a Comment

காப்பீட்டு பணத்துக்காக கணவரை கொன்ற பெண்ணுக்கு விஷ ஊசி..!


காப்பீட்டு பணத்துக்கு ஆசைப்பட்டு, ஒருவரை திருமணம் செய்து, அவரைக் கொன்று கால்வாயில் வீசிய சுசன்னா பாசோ (59) என்ற பெண்ணுக்கு அமெரிக்காவில் விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

லூயிஸ் முசோ என்ற நபரை, 1998ஆம் ஆண்டு, அவரது காப்பீட்டுத் தொகைக்காக கொலை செய்த வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டு, அவரது மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சுசன்னா பாசோவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்காவில் 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 1400பேரில், 14வது பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment