Friday, 14 February 2014

Leave a Comment

ஆர்யாவின் காதல் ஆசை...!!!




காதல் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் ஆர்யா கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–

காதல் என்பது இனிமையான உணர்வு. அனுபவத்தால் தான் தெரியும். காதலிப்பது மகிழ்ச்சியானது. உற்சாகம் தரக்கூடியது.

நான் நிச்சயம் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். காதலித்து திருமணம் செய்து கொள்வதுதான் சிறந்த வழி. ‘காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்’ பாடல் சிறந்த காதல் உணர்வு மிக்க பாடல்.

எனது நண்பர்கள் நடிகர் ஜீவா, சந்தானத்தின் காதல் கதைகள் என்னை மிகவும் கவர்ந்தன.

இவர்கள் சினிமாவுக்கு வரும் முன்பே காதலித்தவர்கள். இப்போதும் மனைவியை காதலித்து கொண்டு இருக்கிறார்கள்.

என்னை பொறுத்தவரை இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு ஆர்யா கூறினார்.

0 comments:

Post a Comment