டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். பின் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உலகையே உலுக்கிப் போட்ட இந்த சம்பவத்தை மையமாக வைத்து அனைத்து மொழிகளிலும் சினிமாவாக எடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒயிட் ஆப்பிள் சினிமா நிறுவனம் சார்பாக டான் கெளதம் இந்த கற்பழிப்பு சம்பவத்தை மையப்படுத்தி ‘ப்ரீடம்’ என்ற பெயரில் தயாரித்து, இயக்குகிறார். இந்த படத்தில் கற்பழிக்கப்பட்ட மாணவி கதாபாத்திரத்தில் ரேவதி என்ற ரே நடிக்கிறார்.
டான் கௌதம் உண்மை சம்பவங்களை படமாக எடுப்பதில் வல்லவர். இவர் ஏற்கெனவே மும்பை தாஜ் ஓட்டலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை மையப்படுத்தி ‘ஆர்டிஎக்ஸ்’ என்ற படத்தை எடுத்துள்ளார்.
பாகிஸ்தான் இசையமைப்பாளர் குலாம் அலி இசையமைக்கிறார். ‘கொலவெறி’ புகழ் அனிருத் பின்னணி இசையமைக்கிறார். இந்த படத்தில் மாணவியின் மரணத்தையொட்டி அமிதாப்பச்சன் எழுதிய கவிதையை பாடலாக அமைத்திருக்கிறார்களாம்.
இந்தியாவுக்கே நன்கு அறிமுகமான உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படம் வெளியாகவிருக்கிறது.
0 comments:
Post a Comment