சமீபமாக வருமான வரித்துறை சார்பில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட உலக நாயகன் கமல்ஹாசன் கோயில் உண்டியல்களில் பணத்தைப் போடுவதை விட வருமானவரி செலுத்துவதில் அதிகப் பலன் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
தமிழ்த் திரையுலகைச் சார்ந்தவர்களில் மிகச் சரியாக வருமானவரி செலுத்துபவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் கமல்ஹாசன். சமீபமாக சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற விழா ஒன்றிற்கு கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
அவ்விழாவில் பேசிய கமல்ஹாசன் கோவில் உண்டியல்களில் பணத்தைப் போடுவதைக் காட்டிலும், சரியாக வருமான வரி செலுத்துவது அதிகப் பலனைத் தரும் என்று பேசியுள்ளார்.
மேலும் தன்னைப் போன்ற கலைஞர்களுக்கான சேவை வரி கொஞ்சம் குழப்புவதாக இருப்பதாகவும், இந்தக் குழப்பத்தைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் விஷ்வரூபம்-2 திரைப்படம் வருகிற மே 9ல் வெளியாகவுள்ளது.
0 comments:
Post a Comment