Monday, 10 February 2014

Leave a Comment

அஜீத்தின் தோற்றம் மற்றும் கதை பற்றி ரகசியம் காக்கும் கௌதம்....!



காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி இருந்த அஜீத் திடீரென்று வெயிட் போட்டு குண்டானார்.அதன்பிறகு எந்த இமேஜும் பார்க்காமல் தனது நடுத்தர வயது தோற்றத்தை வெளிப்படுத்தினார். ரஜினிக்கு அடுத்து தோற்றத்தின் இமேஜ் பற்றி கவலைப்படடாத நட்சத்திரமாக அஜீத் கருதப்படுகிறார்.

 காயங்கள் மற்றும் உடல் சம்பந்தமான பிரச்சினைகள் காரணமாக அவரது உடலில் 24 இடங்களில் ஆபரேஷன் செய்யப்பட்டது. அதற்காக சாப்பிட்ட மாத்திரை மருந்துகளால் உடல் குண்டானது. ஆங்காங்கே நரைத்த முடியுடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார். அதுவே ஒரு அழகாக இருந்தது.

 அதனால் அதே லுக்கில் “மங்காத்தா” மற்றும் “ஆரம்பம்” நடித்தார்.இரண்டுமே ஹிட் என்பதால் அடுத்து “வீரம்” படத்திலும் அதே லுக்கில் வில்லேஜ் கெட்டப்பில் நடித்தார்.அடுத்து அஜீத் நடிக்கப்போவது கௌதம் மேனன் படத்தில். பொதுவாக கௌதம் மேனன் ஹீரோக்களை அழகாகவே காட்டுவார். அவர் அஜீத்தை இதுவரை இல்லாத அளவிற்கு அழகான புதிய தோற்றத்தில் காட்ட இருக்கிறார்.

முதல் கட்டமாக பழைய லுக் அகற்றப்பட்டு விட்டது. இணையதளத்திலிருந்தும்பிரபல ஓவியர்களை கொண்டும் பல வித தோற்றங்களை பிரதியெடுத்து அதில் இருந்து சிலவற்றை தேர்வு செய்து அஜீத்திடம் கொடுத்துள்ளார். அதில் ஒன்றை தேர்வு செய்திருக்கிறார் அஜீத். இப்போது அந்த தோற்றத்திற்கு மாறி வருகிறார்.

 அதனால் நண்பர்களை சந்திப்பது பொது இடத்தில் தோன்றுதை தவிர்த்து வருகிறார். அனேகமாக கௌதம் மேன்ன படம் முடியும் வரை வெளியில் வரமாட்டார் என்கிறார்கள். படப்பிடிப்பு முழுமையாக முடியும் வரை அஜீத்தின் தோற்றம் பற்றியும், கதை பற்றியும் ரகசியம் காக்க முடிவு செய்திருக்கிறார் கௌதம்.

0 comments:

Post a Comment