Tuesday, 11 February 2014

Leave a Comment

என்னுடன் நடிப்பவர்களை கண்டுகொள்வதில்லை - சிம்புவுக்கு நயன் பதிலடியா?



தொடர்ந்து 8 ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளில் முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டு சம்பளத்தையும் கோடிக் கணக்கில் உயர்த்திவிட்ட நயன்தாரா ‘இது கதிர்வேலன் காதல்’ படம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.

“இது கதிர்வேலன் காதல் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம். ‘பவித்ரா’ என்ற நடுத்தர குடும்பத்துப் பெண்ணாக வருகிறேன். ரொம்ப ரசித்து நடித்துள்ளேன். ‘அனாமிகா’ படத்திலும் நடிக்கிறேன். இது இந்தியில் வந்த ‘கஹானி’ படத்தின் மறுபதிப்பு ஆக இருந்தாலும் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

“தமிழில் பெரிய ‘ரீ-என்ட்ரிக்காக’ ராஜா ராணியில நடிக்கவில்லை. கதை பிடித்திருந்ததால் நடித்தேன். அதுக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து வியந்து விட்டேன்.

இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் எனக்கில்லை. கதையும், என்னுடைய கதாபாத்திரமும் பிடித்திருந்தால் நடிப்பேன். அவ்வளவுதான்.

கூட யார் நடிக்கிறார்கள்? என்றுகூட நான் பார்ப்பதில்லை. கதையை ‘ஓகே’ செய்துவிட்டால் பிறகு இயக்குநர் சொல்வதைத்தான் கேட்பேன். நான் எப்பவுமே இயக்குநருக்கு ஏற்ற நடிகையாக இருக்கத்தான் விரும்புகிறேன்.

0 comments:

Post a Comment