தொடர்ச்சியாக ப்ளாப் கொடுத்து வந்த சீயானுக்கு பிரமாண்டத்தின் ஓரெழுத்து படம்தான் பெரிய நம்பிக்கையாக அமைந்தது. அதனால், மொத்த கால்சீட்டாக 2 வருடத்தைக் கொடுத்து விட்டு நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில், தனக்கான கூலி சரியாக வந்து சேரவில்லை என்பதால், திடீர் திடீரென்று டென்சனை காட்டுகிறாராம் நடிகர்.
இந்த படத்துக்காக என்னையே வருத்திக்கொண்டு நடிக்கிறேன். இது எனக்காக மட்டுமல்ல, படம் வெற்றி பெற்று தயாரிப்பாளரும் நாலு காசு பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், அப்படி உசிர கொடுத்து உழைக்கிற எனக்கு பேசினபடி காசை கொடுக்க வேண்டாமா என்று தன் பக்க நியாயத்தை கொட்டுகிறாராம்.
ஆனால், இப்படி அவர் சொல்லவதை பொறுமையாக கேட்ட படாதிபதியோ, நான் என்ன செய்றது, படத்துக்காக செலவு பண்ணினதெல்லாம் யானைப்பசிக்கு சோழப்பொறி போட்ட கதையா போச்சு.நானும் போட்டுக்கிட்டே இருக்கேன் பணமும் போய்க்கிட்டே இருக்கு. இன்னும் படம் முடிஞ்சபாடில்ல என்று புலம்புகிறாராம். அதோடு, பொறுத்தது பொறுத்தீங்க இன்னும் ஒரு மாதம் இருங்க, அதுக்குள்ள ஏரியா பேசிடலாம். அப்ப உங்களுக்கு பைசல் பண்ணிடுறேன் என்று சீரியசான சீயானை சாந்தப்படுத்தி வைத்துள்ளாராம்.
0 comments:
Post a Comment