Tuesday 18 February 2014

Leave a Comment

உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ..!

" மனவலிமை இருந்தால் ஊனம் வெல்லலாம் "
ரமேஷ் அதற்கு ஒரு உதாரணம் :


"ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறை இல்லே
உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே
ரெண்டு காலு உள்ளவனோ கெடுக்குறான்
சிலர் ஒத்த காலில் நல்ல வழி நடக்குறான்"

மனவலிமை இருந்தால் எந்த ஊனமாக இருந்தாலும் அதை வென்று விடலாம்

கோவையில் திரு. ரமேஷ், 33 வயது வெங்கடாசலம், பழனியம்மாள் தம்பதியினரின் இரண்டு மகளுக்கு அடுத்து மூன்றாவதாக பிறந்த செல்ல மகன் இந்த ரமேஷ் பிறக்கும்போதே இவரது காலில் குறைபாடு இருந்தது ஆனால் ரமேஷின் பெற்றோர்கள் அதனை பொருட்படுத்தாமல் ரமேஷை மிக செல்லமாக வளர்த்தார்கள் . ரமேஷ் காலில் நான்கு முழங்கால்கள் இருக்கும். இதனால் அவரால் நடக்கவோ மற்றவர்களை போல இயங்கவோ முடியாது. இந்த வேதனை அவருக்கு இருக்க கூடாது என்பதற்காகவே அவரை செல்லமாக வளர்த்தார்கள்.

பள்ளி செல்லும் பருவம் அடைத்தார் , ஆனால் இவரது குறைபாடு காரணமாக பள்ளி நிர்வாகம் இவரை பள்ளியில் சகமாணவர்களுடன் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது. அப்படியே செர்க்கவேண்டுமனால் ரமேஷ் ஒரு ஆதரவற்றவர் என்று சொன்னால் சேர்த்துக்கொள்கிறோம் என்றார்களாம் , அதற்கு ரமேஷின் பெற்றோர் என் மகன் அனாதை இல்லை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று ரமேஷின் அக்கா இருவரும் கணிதம் மற்றும் பொது பாடங்கள் கற்று கொடுத்திருக்கிறார்கள்.

மகிழ்ச்சியான குடும்பம் சொந்த வீடும் வசதியோடும் அன்போடும் வளர்ந்தவர் வாழ்க்கையில் முதல் சோதனையை தந்தது. திடீரென அப்பாவும் அம்மாவும் இறக்க .தந்தை விட்டு வைத்த கடனை வீட்டை விற்று அந்த கடனை அடைத்து மீதி இருக்கும் பணத்தில் தன் சகோதரிகளுக்கு திருமணம் நடத்தினார் . அதுபோக தன் எதிர்காலத்திற்கு கையில் சொற்ப பணமும் வைத்திருந்தார் .

அதன் பிறகோ இவரது சகோதரிகள் வீட்டில் சிலநாள் தங்கி இருக்கவே சகோதரிகளின் உறவினர்கள் இவரது ஊனத்தை பார்த்து அருவருப்பு பட்டு ரமேஷை வீட்டை விட்டு வெளியே போக சொல்லிவிட்டனர். ரமேஷ் வைத்திருந்த சொற்ப பணத்தை நிரந்தர வைப்பு நிதியாக வங்கியில் போட்டிருப்பதை அறிந்து அந்த பணத்தை உறவினர்கள் கேட்டு வற்புறுத்தியும் உள்ளார்கள் . அனால் அதை தர மறுத்துவிட்டு வீட்டில் இருந்து வெளியேறி கடந்த சில வருடத்திற்கு முன் ஈரநெஞ்சம் கொண்டவர்களின் துணையோடு இவர் ஒரு காப்பகத்தில் சேர்ந்து வாழ்கையை கழித்துவருகிறார். .

ஆனால் அங்கு தான் ஒரு அனாதைபோலவும் ஊனமுற்றவர் போலவும் பாவிப்பது அவருக்கு பிடிக்கவில்லை தனக்கு கால் குறைபாடாக இருக்கும் போதும் தன் வாழ்வை தன் சொந்தக் காலில் நின்று தான் வாழவேண்டும் என்ற வைராக்கியத்தோடு நண்பர்களின் சிறு உதவியோடு ஒரு காலணி விற்பனை கடையை துவக்கி நல்லமுறையில் நடத்திவருகிறார் .
கடந்த ஒருவருடமாக கடைக்கு வாடகை , உணவு, கவுண்டம்பாளையத்தில் இருக்கும் காப்பகத்தில் இருந்து சாய்பாபா காலனி யில் உள்ள அவரது கடைக்கு சென்று வருவதற்கு என மாதம் 8000 வரை அவரது கடையில் இருந்து வரும் லாபத்தில் சரிகட்டி வருகிறார் மீதம் சேமிப்பு என்று எதுவும் இல்லாத நிலை உள்ளது.

ஊனம் ஒரு பெரியதென்று வாழ்க்கையை இழந்தவர்கள் பலர் உண்டு. ஆனால் அதை துச்சமென தூக்கியெறிந்து ஓட ஆரம்பித்து இருக்கும் ரமேஷ் வாழ்வில் பல வெற்றிகள் காணவேண்டும் .

தற்போது மிகுந்த உற்சாகத்தில் காணப்படும் ரமேஷ் கண்களில் தனது காலணி கடையில் முதலீடு பற்றாக்குறை இருப்பது தெளிவாக தெரிகிறது.

யார் யாரையோ வங்கிகளும் பல முதலீட்டாளர்களும் ஓடி ஓடி கடன் கொடுத்தது ஊக்கப்படுத்துகிறார்கள்.

அதனால் இவர்களை போன்ற பலரை மட்டும் தாமாகவே முன்னுக்கு வரட்டும் என ஏன் விட்டு விடுகிறார்கள்..?

0 comments:

Post a Comment