Friday, 14 February 2014

Leave a Comment

நடிகையின் தொப்புளில் நெல்லிக்காய் உருட்டி விளையாடிய கரண்..!




தமிழ் சினிமாவில் நடிகைகளின் தொப்புள் படும்பாட்டை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். பிரபு தேவா ரோஜா தொப்புள்ள தேளை விட்டார், சரத்குமார் நமீதா தொப்புள்ள தண்ணீரை உறிஞ்சிக் குடித்தார். விஜயகாந்த் பம்பரம் விட்டார். அப்புறம் ஒரு படத்தில் எண்ணைவிட்டு நிரப்பினாங்க, ஒரு படத்துல மண்ணை வாரி போட்டாங்க. கடைசியா நையாண்டி படத்துல டியூப்ளிகேட் தொப்புளை பயன்படுத்தினாங்க.

இப்போது கரண் கன்னியும் காளையும் செம காதல் என்ற ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவருடன் தருண்கோபியும் நடிக்கிறார். தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை இயக்கிய வி.சி.வடிவுடையான் இந்தப் படத்தை இயக்குவதோடு சொந்தமாக தயாரிக்கவும் செய்கிறார். மும்பையில் இருந்து திருப்தா என்ற மாடல் அழகியை கொண்டு வந்து நடிக்க வைக்கிறார்கள்.

படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியை அண்மையில் சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஏரிகளில் படம்பிடித்தார்கள். அதில் திருப்தாவின் தொப்புளை மையமாக வைத்து ஒரு பாடல் காட்சியை படமாக்கினார்கள். திருப்தா தொப்புளில் மலர்கள் தூவுவது மாதிரி எடுத்தார்கள். அது திருப்தியாக இல்லை ஓல்டு ஸ்டைல் என்று ஓரங்கட்டினார்கள். அப்புறம் தண்ணீரை ஊற்றிக் பார்த்தார்கள். அதுவும் சரியா இல்லை. தீவிர யோசனைக்குப் பிறகு திருப்தாவின் தொப்புளில் கரண் நெல்லிக்காயை உருட்டு விளையாடுவது மாதிரி சீன் எடுப்பது என்று தீர்மானித்து நெல்லிக்காயை கொண்டு வந்தார்கள். திருப்தா கயிற்று கட்டிலில் படுத்திருக்க கரண் நெல்லிக்காயை உருட்டி விளையாடினார். அதை வி.சி.வடிவுடையான் படம் பிடித்தார்.

ரூம் போட்டு யோசிப்பாங்களோ...

0 comments:

Post a Comment