Thursday, 13 February 2014

Leave a Comment

பள்ளி நண்பர்கள் 60 பேர் சேர்ந்து தயாரித்த படம்...!



பள்ளியில் படிக்கும்போது சினிமாவுக்கு வர ஆசைப்பட்ட 60 மாணவ நண்பர்கள் 30 வருடங்களுக்குபிறகு சினிமாவில் இணைந்தனர். இது பற்றி மறுமுகம் பட இயக்குனர் கமல் கூறியதாவது: 80களில் கொடைக்கானலில் ஒரே கான்வென்ட்டில் படித்த 40 மாணவர்கள் நண்பர்களாகவே இன்றுவரை நீடிக்கிறோம். பள்ளி பருவத்தில் எல்லோரும் இயக்குனர் ஸ்ரீதரின் ரசிகர்கள். ஓஹோ புரடக்ஷன் என்ற பெயரில் நாங்களே கம்பெனி தொடங்கி அதில் அவரது படங்களை நாடகங்களாக நடிப்போம்.

அன்று இணைந்த நாங்கள் 1986 முதல் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் சந்தித்து வருகிறோம். ஒரு கட்டத்தில் 40 பேர் நண்பர்கள் குழுவில் மேலும் 20 பேர் சேர்ந்துகொண்டனர். 60 பேரும் இணைந்து கிரைம் டைம் என்ற படத்தை தயாரித்தோம். மலையாளத்தில் இப்படத்தை உருவாக்கினோம். படம் ஹிட்டாகாவிட்டாலும் எங்களின் சினிமா கனவு பலித்தது.தற்போது மறுமுகம் என்ற படத்தை இயக்குகிறேன்.

எங்கள் நண்பர் டீமில் இருக்கும் டேனியல் பாலாஜி ஹீரோவாக நடிக்கிறார். மற்றொரு ஹீரோ அனூப். பிரீத்தி தாஸ் ஹீரோயின். இப்படத்தை சஞ்சய் தயாரிக்கிறார். அகஸ்தியா இசை. இதுவொரு முக்கோண  காதல் த்ரில்லராக உருவாகி உள்ளது. 60 நாட்கள் படம் எடுக்க திட்டமிட்டு 30 நாட்களில் படத்தை முடித்தோம். 60 நண்பர்களின் உழைப்பும் இதில் இருக்கிறது. இவ்வாறு கமல் கூறினார்.

0 comments:

Post a Comment