ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் வேட்டபாளையம் மண்டலம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் கிருபாராவ். இவரது மனைவி கவுரிதேவி. 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு கவுரிதேவி, கணவர் கிருபாராவை போனில் தொடர்பு கொண்டு, எனக்கு ரூ.3 லட்சம் கடன் உள்ளது. கடன் கொடுத்தவர்கள் என்னை துன்புறுத்துகின்றனர்.
உங்களது கிட்னியை ரூ.5 லட்சத்துக்கு விற்றால் கடனை அடைத்து விடலாம். அதன்பிறகு நாம் சேர்ந்து சந்தோஷமாக வாழலாம் என்று கூறியுள்ளார். மனைவியின் பேச்சை நம்பிய கிருபாராவ்வும், அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதன்படி கடந்த அக்டோபர் மாதம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கிருபாராவ் அறுவை சிகிச்சை செய்து கிட்னியை அதே மருத்துவமனையில் ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார்.
இந்த பணத்தை பெற்ற கவுரிதேவி தனது கள்ளக்காதலனுடன் தலைமறைவாகி விட்டார். கடந்த ஜனவரி மாதம் கிருபாராவ் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வெளியே வந்தார்.
அப்போதுதான் அவருக்கு தனது மனைவி கள்ளக்காதலனுடன் தலைமறைவாகி விட்டார் என்பது தெரியவந்தது. . இதுகுறித்து பிரகாசம் மாவட்ட எஸ்பி சமோத்குமாரிடம் புகார் செய்தார்.
அவரது உத்தரவின்படி வேட்டபாளையம் போலீசாரிடம் புகார் செய்ய சென்றார். இந்த வழக்குக்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை. நீங்கள் விசாகப்பட்டினம் போலீசாரிடம் புகார் செய்ய வேண்டும் என கூறினர். இதனால் என்ன செய்வது என்று அறியாது கிருபாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:
எங்கு சென்றாலும் எனது புகாரை ஏற்று கொள்ள மறுக்கிறார்கள். இனியாவது எனக்கு நியாயம் கிடைக்கும்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தலைமறைவாகி உள்ள எனது மனைவியை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றார்.
0 comments:
Post a Comment