ஒரே நேரத்தில் 2 படங்களின் நிகழ்ச்சிக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் குழப்பம் அடைந்தார் இலியானா. கோலிவுட் முதல் பாலிவுட் வரை பட ரிலீசுக்கு முன்பு அப்படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின்கள் ஊர் ஊராக சென்று விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
படத்துக்கு ஒப்பந்தம் செய்யும் போதே நட்சத்திரங்களுக்கு இந்த நிபந்தனை விதிக்கப்படுகிறது. தமிழில் சில படங்களின் புரமோஷனுக்கு ஹீரோயின்கள் வராததால் தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. அதன்பிறகு அவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியில் ஹாப்பி என்டிங், மைன் தேரா ஹீரோ என்ற 2 படங்களில் இலியானா நடித்து வந்தார். இப்படங்களின் ரிலீஸ் ஒரே சமயத்தில் வந்ததால் இருபட நிறுவனமும் தங்களது பட புரேமோஷன் நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். எந்த நிகழ்ச்சிக்கு போவது என்று குழப்பம் ஏற்பட்டது. இருபட நிறுவனத்திடமும் இதுபற்றி பேசி வந்தார்.
இந்நிலையில் பட நிறுவனத்தினர் தங்களுக்குள் பேசி சுமுக முடிவுக்கு வந்தனர். முதலில் ஒரு படத்தை ரிலீஸ் செய்துவிட்டு இடைவெளிவிட்டு மற்றொரு படத்தை ரிலீஸ் செய்து கொள்ள சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து இலியானா குழப்பத்தில் இருந்து மீண்டார்.

0 comments:
Post a Comment