ஒரே நேரத்தில் இரண்டு பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்து வருவதால் பிரபல தயாரிப்பாளரான ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் கடுமையான பண நெருக்கடியில் மாட்டிக் கொண்டிருக்கிறாரார். இதனால் கமல் நடித்த ‘விஸ்வரூபம் 2′ படம் ரிலீசாகுமா? என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழ்சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களை எடுத்து வரும் நிறுவனம் தான் ஆஸ்கார் பிலிம்ஸ். தற்போது இந்தக் கம்பெனியில் ஷங்கரின் ஐ, அறிவழகன் டைரக்ஷனில் வல்லினம், ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம், மற்றும் விஸ்வரூம படத்தின் இரண்டாம பாகமான விஸ்வரூம 2 ஆகிய படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
இதில் ஷங்கரின் ஐ படம் சுமார் 100 கோடி பட்ஜெட் படம் என்று சொல்லுகிறார்கள். கமலின் விஸ்வரூபம் 2 படமும் கிட்டத்தட்ட இதே பட்ஜெட் தான்.
ஆனால் இருக்கின்ற பணத்தையெல்லாம் போட்டு படம் எடுத்து வந்த தயாரிப்பாளர் வி.ரவிச்சந்திரன் ஷங்கரின் ஐ படத்துக்கும், கமலின் விஸ்வரூபம் படத்துக்கும் மட்டும் வெளியில் பெரிய தொகையை பைனான்ஸ் வாங்கியிருக்கிறாராம். இனி கடன் கேட்டு போகும் இடம் எதுவுமே இல்லை என்ற கடுமையான சூழ்நிலையில் ஐ படத்தின் படப்பிடிப்பு இன்னும் 20 நாட்கள் பாக்கியிருக்கிறது. அதுபோக விஸ்வரூபம் 2 படத்தில் தொழில்நுட்ப வேலைகளும் பாதியில் நிற்கின்றன.
இந்த இரண்டு மெகா பட்ஜெட் படங்களுக்கு ஏகப்பட்ட பணத்தை வாரி இறைத்த தயாரிப்பாளர் ஏற்கனவே படப்பிடிப்புகள் முடிந்து ரிலீஸ் செய்ய வேண்டிய படங்களான பூலோகம், மற்றும் வல்லினம் ஆகிய படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் திணறி வருகிறார்.
அங்கே இங்கே கடன் வாங்கியாவது வல்லினம், பூலோகம் ஆகிய படங்களையும் ரிலீஸ் செய்து விட்டாலும் கூட அடுத்து ஷங்கரின் ஐ படத்தை மட்டும் தான் பெரிய அளவில் நம்பியிருக்கிறாராம் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன். அதை ரிலீஸ் செய்து அதில் ஏதாவது லாபம் வந்தால் மட்டுமே விஸ்வரூபம் 2 வுக்கு மேற்கொண்டு செலவு செய்வது என்றும், இல்லையென்றால் அதை கிடப்பில் போடுவது என்று முடிவு செய்திருக்கிறாராம்.
இதனால் கமலின் விஸ்வரூபம் 2 இந்த வருடத்துக்கு ரிலீசாகுமா என்று பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது.

0 comments:
Post a Comment