தமிழ்த் திரைப்படம் என்றில்லாமல் மற்ற தென்னிந்திய மொழிப் படங்களிலும் ஒரு சில படங்கள் தொடர்ந்து வெற்றிப் படங்களாக நடித்துவிட்டால் உடனே சமூகத்திற்குக் கருத்துக்களைச் சொல்வதும்,
தன்னை ஒரு அவதார புருஷனாக நினைத்துக் கொண்டு சமூகத்தில் உள்ள குறைகளைக் களைவது போன்ற படங்களில் நடிப்பதும், அதன் மூலம் அரசியலுக்குள் நுழையவிரும்புவதும் ஹீரோக்கள் தொன்றுதொட்டுச் செய்துவருவதுதான்.
ஒரு நடிகன் இப்படத்தான் இருப்பான் என்ற மக்களின் மனத்தில் உறைந்துபோயிருந்த பொதுப்புத்திக்கு மாற்றாக மிகவும் எளிமையாகவும்,
திரைப்படங்களைத் தவிர வெளியில் நடிக்காமலும், ஒரு நடிகன் என்பவன் சாதாரண மக்களில் இருந்து துளியும் வித்தியாசமில்லாதவன் என்பதையும் தொடர்ந்து வெளிப்படுத்திவரும் விஜய் சேதுபதி மீண்டும் ஒரு முக்கியமான முடிவினை எடுத்துள்ளராம்.
தன்னிடம் கதை சொல்லவரும் இயக்குனர்களிடம் சமூக சேவகராகவோ அல்லது அரசியல்வாதியாகவோ தான் நடிக்கவிரும்பவில்லை என்றும் அதனால் அத்தகைய கதையம்சம் கொண்ட கதைகளைத் தன்னிடம் கூறவேண்டாம் என்று கூறிவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பந்தாவில்லாத நடிகர் என்று பாராட்டப்பட்டுவரும் விஜய் சேதுபதி தொடர்ந்து இது போன்ற முடிவுகளை எடுத்துவருவதால் ரசிகர்களின் மனத்தில் பெரும் இடத்தினைப் பெற்றுவருகிறார்.

0 comments:
Post a Comment