Monday, 3 March 2014

Leave a Comment

படையப்பா பார்ட்-2 வில் அனுஷ்காதான் சூப்பர் ஸ்டார் ஜோடியாம்..!



இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடிக்கவுள்ள அவரது 55 ஆவது படத்தில் அனுஷ்கா நடிக்கவுள்ளதாக ஏற்கெனவே கிசுகிசுக்கள் பரவிவந்தன. 


ஆனால் தற்பொழுது அஜித் படத்தில் அனுஷ்கா நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.


அதே சமயம் கோலிவுட்டில் மற்றொரு கிசுகிசுவும் பரவிவருகிறது. கோச்சடையான் திரைப்படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள

அடுத்தபடத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கலாம் என்ற வதந்திதான் இப்போது ஹாட் டாபிக். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ள இப்படம் ரஜினியின் சூப்பர் டூப்பர் ப்ளாக் பஸ்டர் படமான படையப்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்றும் பேசப்பட்டுவருகிறது.


கோச்சடையான் வெளியீடு பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் ரஜினியின் அடுத்தபடத்தைப் பற்றி உலவிவரும் அனேக கிசுகிசுக்களில் இதுவும் ஒன்றா அல்லது உண்மையிலேயே படையப்பா பார்ட் 2 உருவாகவுள்ளதா என்பதை சம்பந்தப்பட்டவர்களே விளக்கினால்தான் உண்டு.


தல அஜித் - கௌதம் மேனன் படத்தில் சமந்தா நடிக்கவுள்ளதாகவும் மற்றொரு வதந்தி பரவிவருகிறது.

0 comments:

Post a Comment