உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள உத்தமவில்லன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்களும், விஜய் சேதுபதி நடிக்கவுள்ள இடம் பொருள் ஏவல்
திரைப்படத்தின் படப்பிடிப்புக்களும் இன்று துவங்கியுள்ளன.
கமல்ஹாசன் நடிக்கவுள்ள உத்தமவில்லன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் இன்று துவங்கவுள்ளது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்ததுடன், மீடியாவின் கவனத்திற்கும் வந்திருந்தது.
குறிப்பாக இப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டீசர்களும் ஏற்கெனவே வெளியிடப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்தன.
அதே சமயம் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ள இடம் பொருள் ஏவல் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் இன்று துவங்கியுள்ளன.
விஜய் சேதுபதியை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் வெளியான தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படம் தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
இடம் பொருள் ஏவல் திரைப்படத்தின் மற்றொரு சிறப்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், கவிப்பேரரசு வைரமுத்துவும் இணைந்து பணியாற்றவுள்ளனர்.
இவ்விரு ஜாம்பவான்களும் இணையும் முதல் திரைப்படம் இப்படம் என்பது முக்கியமானது.
சிறந்த எண்டெர்டெயின்மெண்ட் படமாக இப்படம் உருவாக்கபடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment