Tuesday, 4 March 2014

Leave a Comment

அஜித் - கௌதம் மேனன் படம் தீபாவளியில் ரிலீஸ்..!



கௌதம் மேனன் இயக்கும் அஜித் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி வருகிறது. அஜித் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார்.

இதற்காக எட்டு கிலோ எடையைக் குறைத்து கொஞ்சம் ஸ்லிம் ஆகி இருக்கிறார்.

சிக்ஸ் பேக் போல எய்ட் பேக்கில் அசத்தப் போகிறார் அஜித். அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்.

ஏற்கனவே 'ஆஞ்சநேயா', 'கிரீடம்' படங்களில் அஜித் போலீஸாக நடித்திருக்கிறார். ஆனால், அந்தப் படங்களில் இல்லாத ஸ்டைல், லுக், கம்பீரம் கௌதம் மேனன் படத்தில் இருக்குமாம்.

மார்ச் 15ல் ஷூட்டிங் தொடங்குகிறது. வெகுவேகமாக ஷூட்டிங் நடத்தத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால் விறுவிறுப்பாக சுறுசுறுப்பாக படத்தை முடிக்க வேண்டும் என்று கௌதம் மேனன்  தீவிரமாக இயங்க ஆரம்பித்துவிட்டார்.

0 comments:

Post a Comment