சென்னை 28ல் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடிக்க ஆரம்பித்து விட்டது கிரிக்கெட் ஜூரம். போட்டா போட்டி, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், போன்ற படங்களில் கிரிக்கெட் முக்கிய இடம் பிடித்தது.
சுசீந்திரன் அடுத்து இயக்கப்போகும் படமும் கிரிக்கெட்டை மையமாக கொண்டது.
கிரிக்கெட்டில் நடக்கும் மேக்ஸ் பிக்சிங் ஊழல்களை மையமாக வைத்து திருநங்கை ரோஸ் கிரிக்கெட் ஸ்கேண்டல் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தில்லு முல்லு படத்திற்கு பிறகு பத்ரி சொந்தமாக பி அண்ட் சி என்ற தயாரிப்பு கம்பெனியை தொடங்கி அதன் சார்பாக தயாரித்து இயக்கி வரும் படம் 'ஆடாம ஜெயிச்சோமடா'. இதுவும் கிரிக்கெட் ஊழலை மையமாக கொண்ட படம்தான்.
ஆனால் அதனை சீரியசாக சொல்லாமல் லோக்கல் கிரிக்கெட் மூலம் காமெடியாக சொல்ல இருக்கிறார்.
கருணாகரன், சிம்ஹா, பாலாஜி என சமீத்திய காமெடியன்கள்தான் படத்தின் ஹீரோஸ்.
சென்னை 28 கிரிக்கெட்டில் அறிமுகமான விஜயலட்சுமி ஹீரோயின். கே.எஸ்.ரவிகுமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தில்லு முல்லு ஹீரோ சிவா வசனம் எழுதுகிறார்.
"கிரிக்கெட்டில் நடக்கும் ஊழல்கள், சூதாட்டம் ஆகியவற்றை அடிப்டையாக வைத்து கொஞ்சம் கற்பனை கலந்து படம் தயாரகி வருகிறது.
கிரிக்கெட் முறைகேடுகள் பற்றி தெளிவாக அறிந்து கொண்ட பிறகே திரைக்கதையை எழுதினேன்.
மும்பைக்கு சென்று கிரிக்கெட் புக்கிகளிடம் விபரங்களை சேர்த்து கதையை உருவாக்கி உள்ளேன். மே மாதம் ரிலீசாகிறது" என்கிறார் பத்ரி.
0 comments:
Post a Comment