உங்க மீன் தொட்டி இருக்கிறதா? அந்த மீன் தொட்டியில் இருந்து கெட்ட துர்நாற்றம் வீசுகிறதா? இது பெரும்பாலும் மீன்களை வளர்ப்போர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று.
இப்படி மீன் தொட்டியில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தை சரியான பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்வதன் மூலம், துர்நாற்றமில்லாமல் தொட்டியை வைத்துக் கொள்ளலாம்.
இங்கு தமிழ் போல்ட் ஸ்கை மீன் தொட்டியை எப்படி துர்நாற்றமில்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்வது என்று கொடுத்துள்ளது. குறிப்பாக அப்படி மீன் தொட்டியை சுத்தம் செய்யும் முன், மீன்களை நீர் உள்ள மற்றொரு பௌலில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
அதிலும் மீன் தொட்டியை வெறும் சோப்பு பயன்படுத்தி சுத்தப்படுத்தினால் மட்டும், அதிலிருந்து வெளிவரும் துர்நாற்றம் நீங்காது. சோப்பு பயன்படுத்திய பின்னர் வேறு சில பொருட்களைக் கொண்டு சுத்தப்படுத்தவும் வேண்டும். சரி, இப்போது மீன் தொட்டியை துர்நாற்றம் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான சில சுலபமான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மீன் தொட்டியானது நன்கு பளபளப்புடன் இருக்க வேண்டுமானால், வினிகர் பயன்படுத்தலாம். அதற்கு செய்ய வேண்டியது என்னவென்றால், தண்ணீர் மற்றும் வினிகரை ஒன்றாக கலந்து, அதனை தொட்டியில் ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதனால் மீன் தொட்டியில் இருந்து வெளிவரும் துர்நாற்றமானது நீங்கும்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை பேக்கிங் பவுடர் கொண்டு மீன் தொட்டியை சுத்தம் செய்தால், அதில் உள்ள கறைகள் நீங்கி, மீன் தொட்டியானது பளபளக்கும். ஆனால் அப்படி பேக்கிங் பவுடரைப் பயன்படுத்தும் போது, அளவாக பயன்படுத்த வேண்டும்.
எலுமிச்சை கூட மீன் தொட்டியை சுத்தம் செய்ய உதவும். அதற்கு மீன் தொட்டியில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, நன்க தேய்த்து, பின் சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதனால் மீன் தொட்டியில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் போய்விடும்.
உப்பை நீரில் கலந்து அந்த நீரைக் கொண்டு, மீன் தொட்டியை கையால் தேய்த்து கழுவினால், தொட்டியில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.
சோப்பு கொண்டும் தொட்டியை சுத்தம் செய்யலாம். ஆனால் இதனால் மீன் தொட்டி பளபளப்புடன் இருக்குமே தவிர, துர்நாற்றம் இல்லாமல் இருக்காது. ஆகவே இதனை பயன்படுத்திய பின் சிறிது எலுமிச்சை சாற்றினைக் கொண்டு சுத்தம் செய்து விடுங்கள்.
ப்ளீச்சிங் பவுடரைப் பயன்படுத்தியும் மீன் தொட்டியை சுத்தம் செய்யலாம். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் ப்ளீச்சிங் பவுடரை நீரில் கலந்து, தொட்டியை தேய்த்து கழுவ வேண்டும்.
0 comments:
Post a Comment