கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போய் தனது சினிமா வாழ்க்கைக்கே வேட்டு வைத்துக் கொண்டார் வடிவேலு.
அவரை ஒட்டுமொத்த திரையுலகமும் ஒதுக்கித் தள்ளியது. அவ்வளவு ஏன் அவர் யாருக்கு ஆதரவாக இறங்கி தேர்தல் பிரச்சாரம் செய்தாரோ அந்தக் கட்சியின் பேரன்களான உதயநிதி, தயாநிதி ஆகியோரே தாங்கள் தயாரித்த படங்களில் வாய்ப்பு தரவில்லை.
இதை சமீபத்தில் சொல்லி வருத்தப்பட்ட வடிவேலு அரசியல்வாதிகளின் சகவாசம் எந்தளவுக்கு மோசமானது என்பதையும் தெரிந்து கொண்டார். விஜய்காந்துக்கு எதிராகப் பேசினாலும் அவர் ஆளும் கட்சியின் கோபத்தையும் சேர்த்தே சம்பாதித்துக் கொண்டார்.
இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்த அவரின் இடத்தை சந்தானமும், சூரியும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். காமெடி என்ற பெயரில் சந்தானம் காட்டிய டபுள் மீனிங் கவிச்சி காமெடிகளைப் பார்த்து ஆண் ரசிகர்கள் கூட முகம் சுளித்து ஓட்டமெடுத்தது தான் மிச்சம். இருந்தாலும் வடிவேலுவுக்கு நிகரான காமெடியன்கள் பீல்டுக்குள் இல்லாததால் அந்த இருவரும் செய்யும் சேட்டைகளை ரசிகர்களும் பார்த்து தொலைக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் தான் வடிவேலு மீண்டும் தனது பரிவாரங்களுடன் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ படத்தில் ஹீரோவாக ரீ-எண்ட்ரி கொடுக்கத் தயாரானார். இதோ இன்று அவர் ஹீரோவாக நடித்துள்ள ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீசாகியுள்ளது. போஸ்டரில் வடிவேலுவின் அதே ட்ரேட்மார்க் காமெடி லுக்கைப் பார்த்த ரசிகர்கள் அவரது இந்தப்படத்தை வெகுவாக எதிர்பார்த்து காத்துள்ளனர்.
‘பட்டா பட்டி’ படத்தை டைரக்ட் செய்த யுவராஜ் டைரக்ட் செய்திருக்கும் இந்தப்படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக மீனாட்சி தீட்சித் நடித்துள்ளார். முழுப்படப்பிடிப்பும் நடைபெற்று முடிவடைந்துள்ள இந்தப்படத்தை வருகிற ஏப்ரல் மாதம் சம்மர் சீஸனுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள்.
வடிவேலுவின் இந்த பிரம்மாண்ட ரீ-எண்ட்ரியால் கதி கலங்கிப் போயிருக்கும் சந்தானம், சூரி உள்ளிட்ட காமெடி வட்டாரங்கள் அவர் படம் ரிலீசாவதற்குள் எத்தனை படங்களை கமிட் செய்ய முடியுமோ அத்தனை படங்களை கமிட் செய்து தங்களது தேதிகளை நிரப்பி வருகிறார்கள்.

0 comments:
Post a Comment