Monday, 3 March 2014

Leave a Comment

ஸ்ரீதிவ்யா பற்றி பேசினால் எழுந்து சென்றுவிடுவேன்- டென்ஷனான அமலா பால்..!



வேலையில்லா பட்டதாரி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது அமலா பால் டென்ஷனாகிவிட்டார். தனுஷ் தயாரித்து நடித்து வரும் படம் வேலையில்லா பட்டதாரி.


இந்த படத்தை புதுமுகம் வேல்ராஜ் இயக்குகிறார். இப்படத்தின் மூலம் தனுஷுடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்துள்ளார் அமலா பால். தனுஷ் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார்.


வேலையில்லா பட்டதாரி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இதில் படத்தின் நாயகி அமலா பால் கலந்து கொண்டார்.


பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமலாவிடம் உங்கள் இடத்தை ஸ்ரீதிவ்யா பிடித்துவிட்டாராமே என்று ஒருவர் கேள்வி கேட்டார்.


ஸ்ரீதிவ்யா பற்றிய கேள்வியை கேட்டவுடன் அமலா பாலுக்கு கோபம் வந்துவிட்டது. உடனே அவர் வேலையில்லா பட்டதாரி பற்றி மட்டும் கேள்வி கேளுங்கள். வேறு ஏதாவது கேட்டால் எழுந்து சென்றுவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.


சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நிமிர்ந்து நில் படத்தை அமலா பால் பெரிதும் எதிர்பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


அமலா விஜய் நடித்த தலைவா படம் ஹிட்டாகும், தான் கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாகிவிடலாம் என்று நினைத்தார். ஆனால் அவரது நினைப்பில் மண் விழுந்தது.

0 comments:

Post a Comment